மோட்சப்பயணம் (The Pilgrim's Progress)
முகவுரை
ஜான் பனியன்
இங்கிலாந்தை இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் ஆண்டு வந்தபோது ஜாண் பனியன் (1628–1688) தன் விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டு 1660ஆம் ஆண்டு பெட்போர்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் அச்சிறைச்சாலையில் இருந்தபோது தன்னுடைய நேரத்தை வேத ஆராய்ச்சிக்காய் செலவிட ஆரம்பித்தார். மேலும் தேவாவியால் ஏவப்பட்டு, தனது குடும்பத்தையும், சபையையும் கவனத்தில் கொண்டவராய் “மோட்சப் பயணம்” என்னும் நூலை எழுதினார்.
ஜாண் பனியன் விடுதலைப்பெற்று வந்தபோது, இவர் எழுதிய காகிதப் பிரதிகளை அச்சிட்டு வெளியிட, சிலர் இவரை உற்சாகப்படுத்தினார்கள். ஆனால் வேறு சிலரோ இதனால் என்ன பயன் இருக்கப்போகிறதென்றும் அச்சிட அவசியமில்லை என்றும் கூறினர்.
ஆனால் இன்று உலகம் முழுவதும் வேதாகமத்திற்கு அடுத்த புத்தகமாக இப்புத்தகம் மதிக்கப்பட்டும் வாசிக்கப்பட்டும் வருகிறது. இந்தியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு இரண்டு பாகங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் பாகம் கிறிஸ்தியானுடைய பயணத்தைக் குறித்தும், இரண்டாம் பாகம் கிறிஸ்தியானுடைய மனைவியாகிய கிறிஸ்தீனாள், அவள் குமாரர், நண்பர்கள் ஆகியோர் பயணத்தைக் குறித்தும் விவரிக்கிறது.